Posts

ஊடல் 1

நித்திரையை ஏற்றுக் கொண்டது என் உடலே.. உள்ளம் அல்ல. ஆறுதல் கூற  வார்த்தைகளின்றி களைத்து போனதடி எனதுள்ளம். சிறு புன்னகை  உதிர்த்து எனை மன்னித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் உன் அழைப்புக்காக..! - ஹரி~ஜி

நஞ்சு

Image
நஞ்சோடு நளினமும் கலந்த இந்த மஞ்சள் கொடியை பெண்மையோடு ஒப்பிட்டால் பெண்ணினம் எனை எதிர்க்குமோ..?😉 ~ ஹரி.ஜி.  பி

நிலா

யாரால், யாருக்காக, எதனால், ஏன் இப்படி தேய்கின்றோம் நிலவே? உன்னைப் போல் என்னிடத்திலும் பதில் இல்லை..❤️💙❤️

கனவு

சொப்பணமில்லா இரவு வேண்டி கடுந்தவம் புரிந்து இறைவனிடத்தில் வரம் பெற்றேன் சொப்பனத்தில்...💚🙄💚

புலம்பல்

தீ தனில் தோன்றும் பிம்பம் வரைந்தது யாரோ..? நீர் தனில் தோன்றும் நிழல் படத்தை பிரதிபளித்தது யாரோ..? நீராய், பிழம்பாய் கனவுகள் மட்டும் தொடர்கிறது கண்விழித்து கட்டமைப்பதற்குள் கானல் நீராய் கலைந்து விட்டதன் காரணம் நானா? என் கனவா? பதில்கள் - மௌனம். ~ ஹரி. ஜி

அவள்

Image
அந்தியில் கதிரவன் கடலில் மூழ்கும் நேரம் என் விரல் அணைத்து உடை நனைய இட்டுச் சென்றாய்.. ஆர்பரிக்கும் இவ்வலைகள் மீண்டும் மீண்டும்  என் பாதத்தை முத்தமிட என் இதயம் மெல்ல உன்னிடம் சங்கமமாகிறதடி... 💓💓💓💓💓💓💓💓💓💓

மறுத்தல்

உன் விழியறிந்து நான் வெளிக்கொணர்ந்த வார்த்தையை உன் இதயத்தை மூடி மறுத்து விட்டாய்..