புலம்பல்

தீ தனில்
தோன்றும் பிம்பம்
வரைந்தது யாரோ..?

நீர் தனில்
தோன்றும்
நிழல் படத்தை
பிரதிபளித்தது யாரோ..?

நீராய், பிழம்பாய்
கனவுகள் மட்டும்
தொடர்கிறது
கண்விழித்து
கட்டமைப்பதற்குள்
கானல் நீராய்
கலைந்து விட்டதன்
காரணம்
நானா? என் கனவா?

பதில்கள் - மௌனம்.

~ ஹரி. ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!