Posts

Showing posts from 2018

மறுத்தல்

உன் விழியறிந்து நான் வெளிக்கொணர்ந்த வார்த்தையை உன் இதயத்தை மூடி மறுத்து விட்டாய்..

நண்பர்கள் தினம்

என்னிலை அறிந்து, இன்னது குற்றம் என சான்றோர் என் நட்பில் கூறினும் அதை மறுத்து நான் தொடர்வது நட்பிற்கு அழகு தான் அன்றோ..! ~ ஹரி லெஜி

கவலை காதலன்

கவலைகளை தேடி தேடி பொறுக்கி எடுத்துக் கொள்கிறது மனம்.. இந்த கவலை காந்தங்கள் இதயம் எனும் இரும்பு அறையில் ஒட்டபட்ட அதிர்வலைகள்.. இந்த அதிர்வலைகள் கொடுக்கும் சோக கீதங்களை கொணர்ந்து அவளுக்காக எழுதுகிறேன் ஒரு இறங்கற்பா...

பாரதி வீர வசனம்

தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ....? - மகாகவி பாரதியார்..

முத்தம்

உன் முத்தக் காசுகளை எதிர் நோக்கி என்றும் நிரம்பாத பிச்சைப் பாத்திரமாய் பரிதவிக்கும் கண்ணம்... ~ ஹரி ஜி 💕💕💕💕💕💕