மழை காதல்

ஆறில்லா
ஊருக்கு
அழகு பாழ்..
இங்கு அந்த
அழகே பாழாகி
நிற்கிறதே..!

வானத்தை
பார்த்து
பார்த்து
இந்த விளைநிலம்
வயதாகிப் போனேனே!

போருக்கு
அனுப்பி வைத்த
ராணுவ வீரரின்
மனைவியைப் போல
காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி
முத்தத்திற்காக....

வானிலும்
காதலுக்கு
எதிர்புதானா?

உனை
ஊர்கூடி
வழியனுப்பி
வைப்பது எப்போது?

நகரத்தை
ஆக்கிரமித்த
காமுகர்கள்
என்னை
விலைபேசும்
முன் வந்துவிடு..

உன்
வருகைக்காக
காத்திருக்கிறேன்...

- ஹரி. ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!