பெண்மை
பெண்மை
ஓர் அழகுதான்...
ஆபரணத்தால் அழங்கரிக்கப்பட்டவள்
தன்னை நாணத்தால்
மேலும் அழகாக்குகிறாள்
மணமேடையில்.....

தன்
கனவு உலகத்தையும்
தாய் வீட்டையும்
கரைத்து விடுகிறாள்
கண்ணீரில்......
தாய்மை
இவளுக்கு ஓர்
மறுபிறவி..
குவளைத் தண்ணீரிலும்
இவளுடைய பசி
மறைகிறதே!
விருந்தோம்பலில் இவளை
மிஞ்சுவர் யாரோ?
துணிகளுக்கு
இவளுடைய வியர்வை
ஒன்றே போதுமோ?
கரையை போக்குவதற்கு!..
தெய்வம்
தனக்கே கோவிலை
கட்டும் புதுமை
வேறு எங்கே?
அரசாங்க பட்ஜெட்டும்
ஆடிபோகுமோ?
இவளுடைய பட்ஜெட்டில்...
மொத்தத்தில்
காதலைக் கண்களிலும்
கோபத்தை புருவத்திலும்
வெளிக்கொணரும்
பெண்மை
எப்போதும் அழகுதான்!
~ ஹரி ~
ஓர் அழகுதான்...
ஆபரணத்தால் அழங்கரிக்கப்பட்டவள்
தன்னை நாணத்தால்
மேலும் அழகாக்குகிறாள்
மணமேடையில்.....

தன்
கனவு உலகத்தையும்
தாய் வீட்டையும்
கரைத்து விடுகிறாள்
கண்ணீரில்......
தாய்மை
இவளுக்கு ஓர்
மறுபிறவி..
குவளைத் தண்ணீரிலும்
இவளுடைய பசி
மறைகிறதே!
விருந்தோம்பலில் இவளை
மிஞ்சுவர் யாரோ?
துணிகளுக்கு
இவளுடைய வியர்வை
ஒன்றே போதுமோ?
கரையை போக்குவதற்கு!..
தெய்வம்
தனக்கே கோவிலை
கட்டும் புதுமை
வேறு எங்கே?
அரசாங்க பட்ஜெட்டும்
ஆடிபோகுமோ?
இவளுடைய பட்ஜெட்டில்...மொத்தத்தில்
காதலைக் கண்களிலும்
கோபத்தை புருவத்திலும்
வெளிக்கொணரும்
பெண்மை
எப்போதும் அழகுதான்!
~ ஹரி ~
Comments
Post a Comment