கவிதைகள்

அழகு:

பயணித்த  நேரம் கூட
தெரியவில்லை
உன் முகத்தை
பார்த்து கொண்டே
கழிந்த என்
ரயில் பயணம்.


கண்ணில் தென்பட்ட
வண்ணத்துபூச்சி
காவியமாய்
உருவாகிறாள்
என் சுயசரிதையில்.


நீ என்னை
பிரிந்திருக்கையில்
உனக்கும் நட்சத்திரத்திற்கும்
ஒரே தூரம் தான்
அனால்
நீ என் காதருகில்
 கைபேசியாக  அது
என் கண்ணருகில் மின்னும்
நட்சத்திரமாக!


கண்களில் படர்ந்த
மலர்க்கொடியே
இதயத்தை
கடந்து சென்ற நீ
கைகளை விட்டு
நழுவி சென்றாய்..
காரணம் தேடுகிறேன்
தலை கால் புரியாமல்.....

- ஹரி~ஜி

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!